அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருத்துவ அறிக்கை: வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறப்பான ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் முதன்மை மருத்துவரான டாக்டர் சீன் பார்பபெல்லா (Sean Barbabella), 79 வயதான டிரம்பின் இதயம் முற்றிலும் இயல்பாகச் செயல்படுகிறது என்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், ஜனாதிபதியின் அனைத்து முக்கிய உறுப்புகளும் ஆரோக்கியமாகவும், செயல்திறனுடனும் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை, ஜனநாயகக் கட்சியினரின் தொடர் அழுத்தத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது. மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz) உட்பட பலர், டிரம்பின் வயது மற்றும் ஆரோக்கிய நிலை குறித்து பொது மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று வாதிட்டு வந்தனர்.