சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; மலேசியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க பல நாடுகள் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க பல நாடுகள் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. சமூக ஊடகங்கள் மனநலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறித்த புகார்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை பரிசீலித்து வருகிறது.
இந்த சூழலில், 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக மலேசிய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ஆன்லைன் நிதி மோசடிகள், தவறான தொடர்புகள், பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற அபாயங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவும் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டில் தடை விதித்து, டிசம்பர் 10 முதல் அதை அமல்படுத்த உள்ளது. டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகளை ஏற்கனவே அமல்படுத்தி வருகின்றன.
