இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலைகள் தொடர்பான புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, இன்றைய தின நிலவரத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,344,607 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. சந்தை நிலவரங்களின்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 47,430 ரூபாயாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 379,450 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

அதேவேளை, ஆபரணத் தங்கமான 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 43,480 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் ஒரு பவுண் விலை 347,850 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 41,510 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 332,050 ரூபாயாகவும் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.