இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆபத்தான மாதமாக இருக்கப்போகுதாம்!

ஆகஸ்ட் மாதம் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. 

இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆபத்தான மாதமாக இருக்கப்போகுதாம்!

ஆகஸ்ட் மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடக்கப்போகிறது. ஆகஸ்ட் 16 வரை சூரியன் கடக ராசியில் இருக்கும், பின்னர் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசிக்கு நகர்கிறார். செவ்வாய் இந்த நேரத்தில் கன்னி ராசியில் இருக்கிறார், அதே நேரத்தில் புதனும் கடக ராசியில் நிலை பெற்றிருக்கிறார்.  மேலும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு இடம்பெயர்வார். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் தனது நிலையை மிதுன ராசிக்கு மாற்றுவார்.  இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சில நேர்மறையான பலன்கள் கிடைக்கலாம். ஆனால் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து அவர்களின் துரதிர்ஷ்ட காலம் தொடங்கப்போகிறது. அவர்களின் கவனக்குறைவு அவர்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தும், அதிர்ஷ்டம் துணை இல்லாததால் பெரும்பாலும் அவர்களின் முயற்சியால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். இந்த மாதம் எந்தவித குறுக்கு வழிகளையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் குறுக்கு வழிகள் உங்களை பல பிரச்சினைகளில் சிக்க வைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான மாதமாக இருக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சராசரியாக தொடங்கி துரதிர்ஷ்டமான மாதமாக முடிவடையும். இந்த மாதம் எந்த வேலையையும் தள்ளிப்போடாதீர்கள். ஏனெனில் அது பின்னாளில் உங்களுக்கே பெரிய பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது. அதேபோல குறுக்கு வழிகள் மூலம் வெற்றி பெற முயற்சிக்காதீர்கள், அது உங்கள் நற்பெயரைக் கெடுக்கக்கூடும். உங்கள் தொழில், வேலை மற்றும் உறவுகள் என எதுவாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். அது வரும் காலத்தில் கிடைக்காமல் போகலாம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள், அதே திரும்ப கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதம் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குழப்பமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே சிறிய உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், உடனடியாக ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும். மருத்துவமனைக்கு நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியிருக்கும். இது உங்கள் வாழ்க்கையில் அதிக நெருக்கடிகளை உருவாக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். கடந்த கால பிரச்சினைகளால் உங்கள் மனதில் கவலைகள் அதிகரிக்கலாம். இது உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம்.

துலாம்

ஆகஸ்ட் மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் பல பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள். இந்த மாதம் முழுவதும் அவர்களுக்கு சோதனையான மாதமாக இருக்கும். எந்தவொரு பிரச்சனையையும் முழுமையாக சமாளிக்க அவர்களுக்கு அதிக முயற்சியும், மற்றவர்களின் உதவியும் தேவைப்படும். சிறிய விஷயங்களை கூட தீவிரமாக அணுக வேண்டும். இல்லையெனில், அது உங்கள் மன அமைதியைக் கெடுத்துவிடும். ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். திருமண வாழ்க்கையில் சில வாக்குவாதங்களும், பிரச்சினைகளும் எழலாம். எனவே மிகவும் கவனமாக இருங்கள்.