தோனியின் ஓய்வு...  திட்டத்தை மாற்றி சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்.. வேற லெவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மகேந்திர சிங் தோனியின் முக்கிய பங்கு உண்டு.

தோனியின் ஓய்வு...  திட்டத்தை மாற்றி சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்.. வேற லெவல்!

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார் என்று கேட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைதான் அனைவரும் சொல்வார்கள்.

ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற நிலையில் அவரே முதல்நிலை கேப்டனாக இருக்கிறார். 42 வயதை தாண்டும்  தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. 

அத்துடன், அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மகேந்திர சிங் தோனியின் முக்கிய பங்கு உண்டு. அவரது இடத்தை களத்திற்கு உள்ளும் வெளியிலும் நிரப்புவது என்பது சற்று கடினமான விஷயமே.

இதுவரை ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எடுத்துப் பார்த்தால் மிகப்பெரிய அணியாக இருந்திருக்காது. 

ரிங்கு சிங்குவுக்கு சில லட்சம்.. அடி வாங்கிய பந்துவீச்சாளருக்கு 5 கோடி சம்பளம்.. ரசிகர்கள் கொதிப்பு!

அவர்கள், வீரர்களுக்கான சுதந்திரம் மற்றும் சிறப்பான முறையில் வழிநடத்துதல் மூலமாக அவர்கள் கோப்பையை வென்று இருக்கிறார்கள். ஆனால், நாளை புதிய ஒரு கேப்டன் வரும்பொழுது அணியை இதே அளவில் சராசரியாக வைத்திருக்க முடியாது.

எனவே, அணியை பலப்படுத்திதான் புதிய கேப்டனுக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும். இதை உணர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ஏல அணுகுமுறையை இந்த முறை மாற்றி இருக்கிறது.

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அனுபவ வீரர்களின் மேல்தான் அதிக முதலீட்டை செய்யும். ஆனால் இந்த முறை சூழ்நிலையை புரிந்து, அறிமுகவீரர் 20 வயதான சமீர் ரிஸ்விக்கு 8.40 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. 

அம்பதி ராயுடு இடத்துக்கு மட்டுமல்லாமல், இளம் இந்திய வீரர் தேவை என்பதற்காகவும் இவர் வாங்கப்பட்டு இருக்கிறார். அதேசமயத்தில் அம்பதி ராயுடு இடத்தை அதிரடியாக வெளிநாட்டு வீரரான நேரில் மிட்சலை வைத்து நிரப்பி இருக்கிறார்கள்.

தோனியின் ஓய்வை மனதில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் புதிய அணுகுமுறையில் அணியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது. களத்தில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...