இறுதிப்போட்டியில் அஸ்வின்? ஆஸ்திரேலியாவின் வீக்னஸ் இதுதான்.. ரோகித் போட்ட பலே திட்டம்!

தற்போது ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதால் இந்தியாவின் பிளேயிங் லெவனின் ஒரு அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்பு  உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

இறுதிப்போட்டியில் அஸ்வின்? ஆஸ்திரேலியாவின் வீக்னஸ் இதுதான்.. ரோகித் போட்ட பலே திட்டம்!

உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வந்தால் ஒரு திட்டமும் ஆஸ்திரேலியா வந்தால் ஒரு திட்டமும் என இரண்டு திட்டங்களை ஏற்கனவே இந்திய அணி வைத்திருந்தது.

தற்போது ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதால் இந்தியாவின் பிளேயிங் லெவனின் ஒரு அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்பு  உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக தடுமாறும் ஆஸ்திரேலியா அணி , ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட தடுமாற்றியது.

வார்னர், டிராவிஸ் ஹெட் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் தமிழக வீரர் அஸ்வினை அணிக்கு கொண்டுவர ரோகித் சர்மா திட்டம் தீட்டிள்ளதாக தெரிகிறது.

இறுதிப்போட்டிக்க 8ஆவது முறையாக ஆஸி தகுதி.. அரையிறுதியில் ஏற்பட்ட டுவிஸ்ட்!

லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்ட போது ரோகித் சர்மா அஸ்வினை சேர்த்தார். இதனால் அஸ்வின் இறுதிப் போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

ஆனால் அஸ்வின் அணிக்குள் வந்தால் ரோஹித் யாரை நீக்கபோகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளதுடன், சூரியகுமார் யாதவ் கீழ் வரிசையில் விளையாடுவதற்காக உள்ள போதும், தற்போது சூரியகுமார் பேட்டிங் பெரிய அளவில் இந்தியாவுக்கு தேவைப்படவில்லை என்றே கூறலாம். 

இதன் காரணமாகவே சுழற் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் தெரிந்த அஸ்வினை அந்த இடத்தில் சேர்க்க ரோகித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. 

எனினும், இந்திய அணி தொடர்ந்து ஒரே அணியை வைத்து இந்த தொடரில் விளையாடி வெற்றி பெற்று வரும், நிலையில், அணியை மாற்ற வேண்டாம் என்றும் இதே வீரர்களை வைத்து விளையாடுங்கள் என்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...