பந்துவீச்சு தரவரிசை... உச்சத்தை எட்டி பும்ரா படைத்த வரலாற்று சாதனை... பின்தங்கிய அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

பந்துவீச்சு தரவரிசை... உச்சத்தை எட்டி பும்ரா படைத்த வரலாற்று சாதனை... பின்தங்கிய அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
 
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிலும் இந்திய மைதானங்களில் ரிவர்ஸ் ஸ்விங்கை கொண்டு மேஜிக்கை நிகழ்த்தி காட்டினார் பும்ரா.

இம்ரான் கான், வாக்கர் யூனுஸ், சோயப் அக்தர், ஜாகீர் கான் ஆகியோரை தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங் கலையை பும்ரா நன்கு அறிந்தவராக உள்ளார்.

இதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பவுலிங் சராசரியை பும்ரா வைத்துள்ளார்.

துரோகம்... ரோஹித் சர்மாவை ஒழிக்க நினைத்த மும்பை இந்தியன்ஸ்... பயிற்சியாளரால் பரபரப்பு!

அதேபோல் 34 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

சர்வதேச வீரர்களுக்கான ஐசிசி தரவரிசை வெளியாகியுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

அதேபோல் முதலிடத்தில் இருந்த அஸ்வின், 2 இடங்கள் சரிந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.

அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதல்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் பும்ரா முதலிடம் பிடித்திருந்தார்.

இதன் மூலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...