துரோகம்... ரோஹித் சர்மாவை ஒழிக்க நினைத்த மும்பை இந்தியன்ஸ்... பயிற்சியாளரால் பரபரப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியில், பேட்டிங் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், டி20 உலகக் கோப்பையில் ரோஹிர் சர்மாவின் இடம் உறுதியாகிவிட்டது.
 
                                மும்பை இந்தியன்ஸ் அணியில், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழ ஆரம்பித்துள்ளது. திடீரென்று, குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை ட்ரேடிங் செய்து, அவரை மும்பை அணிக்கு கேப்டனாக நியமித்தனர்.
ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தப் பிறகு, அவருக்கு ரோஹித் சர்மா இன்னமும் வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ரோஹித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியப் பிறகு, ரோஹித் மனைவி ரித்திகா சஜ்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரோஹித் சர்மா குறித்த ஒரு பதிவை லக் செய்தார்.
இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ரோஹித் சர்மா கடும் அதிருப்தியில் இருப்பது தெரிய வருகிறது.
ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கவும் திட்டமிட்டதாக கூறப்பட்டது. இது, ரோஹித்துக்கு இந்திய அணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் இருந்தது.
2வது டெஸ்டில் படுதோல்வி.. இந்தியாவை விட்டே புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து அணி.. அதிரடி முடிவு!
ஐபிஎல் 17ஆவது சீசனை வைத்துதான், டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய, பிசிசிஐ முடிவு செய்திருந்தது.
ஒருவேளை, ரோஹித் சர்மாவை மும்பை அணி களமிறக்கவில்லை என்றால், அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காது என்ற நிலைமை இருந்தது.
இதனால்தான், ஜனவரியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரில், தன்னை சேர்க்க வேண்டும் என ரோஹித் சர்மா அவசர அவசரமாக பிசிசிஐயை நாடினார்.
ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் வாய்ப்பு கிடைத்த நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆனார். இருப்பினும், கடைசிப் போட்டியில் அதிரடியாக சதம் அடித்து, டி20 உலகக் கோப்பை அணியில் தனது வாய்ப்பை உறுதி செய்துவிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில், பேட்டிங் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், டி20 உலகக் கோப்பையில் ரோஹிர் சர்மாவின் இடம் உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ''ரோஹித் சர்மாவுடன் ஆலோசித்தப் பிறகு, அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினோம்'' என பேசினார்.
அதன்பிறகு, ட்வீட் வெளியிட்ட ரோஹித் சர்மாவின் மனைவி, பவுச்சர் கூறியதில், அதிகம் பொய்தான் இருக்கிறது எனக் கூறினார். அதன்பிறகு, பவுச்சரின் பேட்டியை, மும்பை நிர்வாகம் நீக்கினர்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






