பிக் பாஸ் கிளுகிளுப்பு.. இதுவரை உள்ளே சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.  சீசனுக்கு சீசன் கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. 

Oct 13, 2023 - 23:39
பிக் பாஸ் கிளுகிளுப்பு.. இதுவரை உள்ளே சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது.  சீசனுக்கு சீசன் கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. 

இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள்  ஆறு கவர்ச்சி நடிகைகள் சென்றுள்ள நிலையில், அவர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஷெரின்

அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்திலேயே கிளாமராக நடித்த ஷெரின் விசில் படத்திலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் வந்திருப்பார்.  இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். அடையாளம் தெரியாத அளவுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர், குறுகிய நாட்களிலேயே உடல் எடையை குறைத்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.

நமீதா

தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி கன்னியாக கிறங்கடித்தவர் தான் நடிகை நமீதா. நமீதா முதல் சீசனில் கலந்து கொண்டார். ஓரளவுக்கு தாக்கு பிடித்த இவர் நிகழ்ச்சியின் இடையில் எலிமினேட் செய்யப்பட்டார்.

யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்களில் யாஷிகா ஆனந்த் அளவிற்கு கவர்ச்சி காட்டியவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் முகம் சுளிக்கும் அளவிற்கு ஓவர் கிளாமரில் இருந்தார். ஒரு கட்டத்தில் பிக் பாஸ் டாஸ்க் வைத்து அந்த சீசன் முழுக்க யாஷிகாவை சேலை கட்ட வைத்தார்.

ரேஷ்மா பசுபுலேட்டி 

ஒரு சில படங்களில் தலைகாட்டிய ரேஷ்மா பசுபுலேட்டி,  பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தாராளமாக கவர்ச்சி காட்டினார். வீட்டை விட்டு வெளியே வந்தும் கூட கவர்ச்சியின் உச்சத்தை தொட்ட ரேஷ்மாவுக்கு அதன் பின்னர் சீரியல் வாய்ப்புகள் கிடைத்தன.

மும்தாஜ்

தமிழ் சினிமாவில் குஷி படத்தில் இவர் ஆடிய கட்டிப்புடி கட்டிபுடிடா பாடல் இன்று வரை 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் என்றால் மிகையில்லை. கவர்ச்சி நடிகையாக பிக் பாஸ் இவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும், சினிமாவில் தான் கவர்ச்சி எல்லாம் நேரில் நான் வேற மாதிரி என்று காட்டிவிட்டார் மும்தாஜ்.

விசித்ரா

90களில் படு பிஸியாக இருந்த கவர்ச்சி நடிகை தான் விசித்ரா. கவர்ச்சி மட்டும் இல்லாது காமெடி காட்சிகளிலும் நிறைய நடித்திருக்கிறார். குக் வித் கோமாளி மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்த இவர், தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டிருக்கிறார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!