தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளன இந்த படத்தின் ரிலீசுக்குகாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அத்துடன், இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் ஓடிடியில் நல்ல விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது.
