இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. தம்புளையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் 6 ஓவர்களில் 72 ரன்களைச் சேர்த்து அசத்தினர். 

அதன்பின் இருவரும் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்திருந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இப்ராஹிம் ஸத்ரானும் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - அஸ்ரதுல்லா ஒமர்ஸாய் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 70 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 31 ரன்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் ஆட்டமிழந்தார். 

இறுதியில் முகமது நபி மற்றும் முகமது இஷாக் ஆகியோர் தலா 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. 

இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மதீஷ பதிரன, அகிலா தனஞ்செய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - குசல் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசல் மெண்டிஸ் 16 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்கவும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். 

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்க அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 

இப்போட்டியில் பதும் நிஷங்க அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 60 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினர். அதேசமயம் சதீரா சமரவிக்ரமா 23 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் தோல்வியும் உறுதியானது. 

இதையடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்து இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 

இருப்பினும் மறுமுனையில் விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 4 ரன்களுக்கும், தசுன் ஷனக 13 ரன்களுக்கு என்ன விக்கெட்டை இலக்க, இலங்கை அணி வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

ஆனால் அந்த ஓவரில் இலங்கை அணியால் 15 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இந்த சுற்றுப்பயணத்தில் தங்களது முதல் வெற்றியைப் பதிசெய்தும் ஆறுதலை தேடியுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...