தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் கடைசியாக ‘டெஸ்ட்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில், ‘மண்ணாங்கட்டி’, ‘டியர் ஸ்டூடண்ட்’ படங்கள் வெளியாக உள்ளது.
மேலும், ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘ராக்காயி’ படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இதனிடையே தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
படத்தின் கதையை கேட்ட நயன்தாராவை நடிப்பதற்கு ஓகே கூறியுள்ளார். ஆனால், இப்படத்தில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
