சீனாவில் இரண்டு மாதப் பயிற்சியை நிறைவு செய்து பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்

சீனாவின் ஹங்சோ நகரில் அமைந்துள்ள ரோபோ பயிற்சி நிலையத்தில் இரண்டு மாத காலக் கடுமையான பயிற்சியைப் பெற்ற நான்கு ரோபோக்கள் அதிகாரபூர்வமாகப் பட்டம் பெற்றுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்தப் பயிற்சியின் போது வழிகாட்டுதல், ஆய்வுப் பணிகள் மற்றும் பியானோ வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு திறன்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில் அந்த ரோபோக்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமாகப் பயிற்சியை நிறைவு செய்துள்ள இந்த நான்கு ரோபோக்களும் சீனா மற்றும் தென் கொரியாவில் உள்ள பல்வேறு துறைகளில் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.