இரண்டு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள கிசுகிசுவா.. மூன்றாவது ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது.

இரண்டு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள கிசுகிசுவா.. மூன்றாவது ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கி உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில், கேப்டனை கவராத ஆறு போட்டியாளர்கள் ஸ்மால் வீட்டில் உள்ளனர்.

அந்த ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரக்கூடாது, பாத்ரூம், சமையல், வீட்டு கிளீனிங் என அனைத்தையும் செய்ய வேண்டும் என்று புது ரூல்ஸ் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியானது. இதில், ரூல்ஸை மீறிய காரணத்தால் யுகேந்திரன் மற்றும் விசித்ரா இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். 

அதைக்கேட்ட பிரதீப், ஏற்கனவே நாமினேட் ஆகி ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஆறு பேரில் 2 பேரை இங்க அனுப்பிடுங்க பிக் பாஸ் என்று கோரிக்கை வைக்கிறார்.

இதனால் கடுப்பான விசித்ரா, எங்க 2 பேருக்கு சமமான பிளேயர் இருக்காங்களா என விசித்ரா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. 

உடனே வீட்டின் கேப்டன் விஜய் வர்மா தேவையில்லாம எதையாவது சொல்லாதீங்க என்று கூறுவது முதல் ப்ரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையடுத்து, பிற்பகல் 12 மணிக்கு இரண்டாவது ப்ரோமோ வெளியானது. அதில்,பிரதீப் நேற்று சப்பாத்தி குருமாவை யாரை கேட்டு சொன்னீங்க என்று விஜய்யைப் பார்த்து கேட்க, நேற்று இதுபற்றி நான் பேசும் போது எல்லாரும் இருந்தாங்க அப்போது, நீங்க துண்டைத்தான் ஆட்டிக்கிட்டு இருந்தீங்க என்றார். இதனால், இருவருக்கும் சாப்பாட்டு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

 இதையடுத்து சற்றுமுன் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்க் நடைபெறுகிறது. இதில், சில போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்கள் பற்றி கிசுகிசு சொல்லவேண்டும் என புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த பேன்ஸ் ப்ரோமோ செம மொக்கையா இருக்கு என்றும், இப்போவே கிசுகிசுவா என கிண்டலாக கேட்டுவருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...