ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுத்த லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள்

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார். 

Oct 11, 2023 - 11:46
ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுத்த லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள்

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு வர போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் பேச்சால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். அதில் இவரின் கொஞ்சலான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதன்பின் கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படத்தில் அவருடன் பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் நடிக்கும் படங்கள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா படவாய்ப்புகள் இல்லாமல் அடிக்கடி புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார். அதில் தற்போது அதிகம் கவர்ச்சி காட்டி வரும் லாஸ்லியா ரம்யா பாண்டியனைப்போல மொட்டை மாடியில் அமர்ந்து இடை அழகைக் காட்டி  புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். 

இவரின் இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!