உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கடந்த நவம்பர் முதல் டிசெம்பர் வரை இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 333,183 மாணவர்கள் தோற்றினர். 

அவர்களில் 253,390 பேர் பாடசாலை சார்பிலும், 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகளாகவும் தோற்றினர்.