இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித்.
சுமார் 10 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய புஜாரா, ராகுல் டிராவிட்டுக்கு பின் எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நிதான ஆட்டம் ஆடுவதில் வல்லவராக காணப்பட்டார்.