Nano Banana Pro: இலவசமாக முயற்சி செய்யலாம்.. Google வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Google தனது புதிய AI பட உருவாக்கும் மாடலான Nano Banana Pro–வை அறிமுகப்படுத்தியுள்ளது. Gemini 3 Pro அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மேம்பட்ட மாடல், “பயனர்களின் கற்பனைகளை ஸ்டூடியோ தரப்படங்களாக மாற்றும் திறன்” கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய Nano Banana மாடல் 3D படங்களை உருவாக்கும் திறனால் பெரும் வரவேற்பைப் பெற்றது. புதிய Pro பதிப்பு, ஒரே நேரத்தில் 14 படங்களை இணைத்து புதிய காட்சிகளை உருவாக்கும் திறனையும், ஒரே படத்தில் 5 பேர் வரை சேர்க்கும் வசதியையும் வழங்குகிறது.

இது போஸ்டர், அழைப்பிதழ், இன்ஃபோகிராபிக்ஸ் போன்ற காணொளி-கலைத்துறைக்கான வடிவமைப்புகளை உருவாக்க மிகச் சிறந்ததாகும். குறிப்பாக, படங்களுக்குள் நேரடியாக வாசிக்கக்கூடிய எழுத்துகளை — டாக்லைன், ஸ்லோகன், பத்திகள் — பல மொழிகளில் இயல்பாக உருவாக்கும் திறனும் இதில் உள்ளது.

ஒளி, நிறம், கேமரா கோணம், focus, bokeh effect போன்ற அமைப்புகளை எளிதில் மாற்றலாம். மேலும், பகல்–இரவு மாற்றம், color grading போன்ற மேம்பட்ட எடிட்டிங் செயல்பாடுகளும் கொண்டுள்ளது. 4K வரை பல வகை aspect ratio-களில் படங்களை உருவாக்க முடியும்.

Google, இந்த மாடலில் C2PA metadata இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் AI உருவாக்கிய படங்களை deepfake-களிலிருந்து வேறுபடுத்த எளிதாகும். TikTok கூட இதே watermark முறையைப் பயன்படுத்திவருகிறது.

Nano Banana Pro-வை உலகளவில் Gemini app–இன் “Create image” விருப்பத்தில் இலவசமாக முயற்சி செய்யலாம், ஆனால் free-tier பயனர்களுக்கு quota வரம்பு இருக்கும். Google AI Plus, Pro, Ultra சந்தாதாரர்கள் கூடுதல் அம்சங்களைப் பெறுவர்.

இந்த புதிய அறிமுகம், AI பட உருவாக்கத் துறையில் Google-ஐ முன்னணியில் நிலைநிறுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.