ரோஹித் இல்லனா பும்ராவே கிடையாது.. என்ன நடந்துச்சு தெரியுமா? 

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய கிரிக்கெட்டுக்கு சில சிறந்த இளம் வீரர்களை அடையாளம் காட்டி இருக்கின்றது.

ரோஹித் இல்லனா பும்ராவே கிடையாது.. என்ன நடந்துச்சு தெரியுமா? 

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய கிரிக்கெட்டுக்கு சில சிறந்த இளம் வீரர்களை அடையாளம் காட்டி இருக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியால் அடையாளம் காட்டப்பட்ட வீரர்களில் மிக முக்கியமானவராக  ஜஸ்பரித் பும்ரா உள்ளார்.

இந்த காலகட்டத்தில் மூன்று வடிவத்திலும் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது இவர் மட்டும்தான். 

முதல்முறையாக இவரை 2013ஆம் ஆண்டு அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அந்த ஆண்டில் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2014ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இவரால் நான்கு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2015 ஆம் ஆண்டு இவருக்கு மீண்டும் வாய்ப்பை குறைத்து நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு தந்தது. இவர் போட்டியை விட குறைவாக மூன்று விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இவரை விடாமல் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டும் அணியில் வைத்திருந்தது. அந்த ஆண்டிலிருந்துதான் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறுமுகம் தொடங்கியது. 

அந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய இவர் 16 விக்கெட் கைப்பற்றினார். 2017ஆம் ஆண்டு 17 போட்டிகளில் 20 விக்கெட் கைப்பற்றி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இதற்கு அடுத்து இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாள வீரராக மாறினார். மேலும் இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் வாய்ப்பு கிடைத்து சாதிக்க ஆரம்பித்தார். 

ரவி சாஸ்திரியால் சிவப்புப்பந்து கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றவர், இன்று உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவாகி இருக்கிறார்.

தற்பொழுது பும்ரா வளர்ச்சிக்கு பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் பற்றி பேசிய பார்த்திவ் படேல் பேசியுள்ளார்.

“2015ஆம் ஆண்டில் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் புதியவராக இருந்தார். அப்போது அவரது செயல் திறன் குறைவாக இருந்த காரணத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வெளியேற்ற விரும்பியது. 

ஆனால் கேப்டன் ரோகித் சர்மா, பும்ராவின் செயல் திறனை நம்பினார். அடுத்த ஐபிஎல் சீசனிலேயே பும்ராவின் சிறந்த செயல்பாட்டை நாங்கள் பார்த்தோம்” என்று சொல்லி உள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...