நம்பர் 1 வாய்ப்பை பறிகொடுத்த இந்தியா.. முதல் இடத்தில் எந்த அணி?
நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி 1.923 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது. இந்திய அணி 1.659 நெட் ரன் ரேட் மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியா 2023 உலகக்கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில், ஆடி நான்கிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. இதற்கு காரணம், நெட் ரன் ரேட் தான்.
இந்தியா நான்கு போட்டிகளில் ஆடி ஒவ்வொரு வெற்றிக்கும் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே போல, 2023 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி நான்கு போட்டியில் ஆடி, நான்கிலும் வென்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஆனால், நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி 1.923 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது. இந்திய அணி 1.659 நெட் ரன் ரேட் மட்டுமே பெற்றுள்ளது.
வங்கதேசதுக்கு எதிரான போட்டியில் இந்தியா 257 ரன்கள் வெற்றி இலக்கை 41.3 ஓவர்களில் எட்டி இருந்தது. இதே இலக்கை இன்னும் 7 ஓவர்களுக்கு முன்பாக இந்தியா எட்டி இருந்தால் நியூசிலாந்து அணியை முந்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்க முடியும்.
சுயநலம்.. டீமுக்கு உலை வைக்கப் பார்த்த கோலி.. கொந்தளித்த ரசிகர்கள்
அடுத்த போட்டியில் இந்தியா இன்னும் பெரிய வெற்றியை பெற்றால் முதல் இடத்தை பெற வாய்ப்பு உள்ளது. இதே உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில், இந்திய அணியிடம் தோல்வி அடைந்த வங்கதேசம் 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.
அந்த இரண்டு அணிகளும் மூன்று போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள், எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது வரிசையில் இடம் பெற்றுள்ளன. இதில் இலங்கை அணி மட்டுமே இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |