இனி ஒன்றல்ல... இரண்டு... வாட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
                                மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது Facebook பதிவில் குறிப்பிடுகையில், இப் புதிய update மூலம் பயனர்கள் ஒரே செயலியில் (App) இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்த முடியும்.
அத்துடன், ஒரு அலைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் ஏனைய பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






