இப்படி நடந்ததே இல்லையே... படுமோசமான சாதனையை செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சில மோசமான சாதனைகளைப் செய்துள்ளது.

இப்படி நடந்ததே இல்லையே... படுமோசமான சாதனையை செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சில மோசமான சாதனைகளைப் செய்துள்ளது.

அதாவது, 2010 முதல் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மிகக் குறைந்த ஸ்கோராக பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்த 101 ரன்கள் மாறியுள்ளதுடன், இதற்கு முன், 2010 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இவ்வாறு மோசமாக ஆடியதுடன், அப்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 82 ரன்களுக்கு சுருட்டி இருந்தது. 

தற்போது அதே பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 101 ரன்களுக்குள் சுருட்டியதுடன், இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 

இதன் மூலம் பிளே ஆஃப் சுற்று வரலாற்றில் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட் ஆக்கிய சாதனையைப் ராயல் சேலஞ்சர்ஸ் படைத்து உள்ளதுடன், இதற்கு முன், 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16.1 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. 

இது ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் மிகக் குறைந்த ஓவர் மட்டுமே களத்தில் நின்ற ஒரு அணியின் மோசமான ரெக்கார்டாக இருந்த நிலையில், அதை தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி முறியடித்து இருக்கின்றது.

மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் முழுமையாக 20 ஓவர்கள் நடந்த போட்டி ஒன்றில், வெற்றி இலக்கை 10 ஓவர்களுக்குள் எட்டிய முதல் அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்துள்ளதுடன், இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 102 ரன்கள் என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சரியாக 10 ஓவர்களில் எட்டி இந்த சாதனையைப் படைத்து உள்ளது.

அத்துடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் அபாரமாக விளையாடி 27 பந்துகளில் 56 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.