போஸ் கொடுத்த சூர்யா பட நடிகையை திணறவிட்ட காவலர்!
எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனியா நடித்திருந்தார்.
எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனியா நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவரை காதலிக்கும் காதலியாக பாலிவுட்டில் அறிமுகமானார் திஷா பதானி.
நடிகை திஷா பதானி நடிகர் ஜாக்கிசான் நடித்த குங்ஃபூ யோகா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் இவர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் மகன் டைகர் ஷெராஃபை திஷா பதானி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அலெக்சாண்டர் எனும் மாடலுடன் திஷா பதானி டேட்டிங் செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன.
இவரை சுற்றி சர்ச்சைகள் பல வந்தாலும், அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
திஷா பதானி தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்மாக உருவாகி வரும் கங்குவா படத்தில் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில்,படப்பிடிப்புக்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகை திஷாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு புகைப்படம் எடுத்தனர்.
அவர்களுக்கு போஸ்கொடுத்துவிட்டு வந்த திஷா பதானியை தடுத்துநிறுத்திய போலீஸ் அதிகாரி ஒருவர், ஐடி கார்டை கேட்டுள்ளார்.
இதனால், சற்று பதறிய நடிகை கை பையில் ஐடி கார்டை தேடிபார்த்து கிடைக்காததால், விமானத்திற்குள் செல்ல காவலாளி அனுமதிக்கவில்லை. பின் உதவியாளர் வந்து ஐடி கார்டை காண்பித்தபின் தான் திஷா பதானி உள்ளே சென்றார்.
இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் நடிகையை இப்படி திணறவிட்டீங்களா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |