சாதனை படைத்த ரிஷப் பண்ட்.... ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உச்சம் தொட்டார்... கில் 5 இடங்கள் முன்னேற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பண்ட்,  ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புது உச்சம் தொட்டு உள்ளார்.

சாதனை படைத்த ரிஷப் பண்ட்.... ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உச்சம் தொட்டார்... கில் 5 இடங்கள் முன்னேற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பண்ட்,  ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புது உச்சம் தொட்டு உள்ளார்.

அத்துடன், கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை செய்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2001 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன்டி ஃபிளவர் இந்த சாதனையை செய்திருந்தார்.

இந்த நிலையில்,  பட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ள ரிஷப் பண்ட் முதல் முறையாக 800 புள்ளிகளை கடந்து உள்ளதுடன், டெஸ்ட் வரலாற்றில் 800 புள்ளிகளை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை தனதாக்கினார். 

முதல் டெஸ்டில் சதம் அடித்த இந்திய அணியின் புதிய கேப்டன் கில், ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது இருபதாவது இடத்தை பிடித்திருக்கின்றார். 

டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ரூட் முதல் இடத்திலும் ஹாரி ப்ரூக் 2-வது இடத்திலும் தொடர்கிறார்கள்.

முதல் டெஸ்டில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் நான்காவது இடத்தில் நீடிக்கின்றார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி 100 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்திலும், வங்கதேசம் 33 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை 33 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி புள்ளிகள் எதுவும் இன்றி நான்காம் இடத்தில் உள்ளது.