ரோகித்  ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ கொடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு.. இதைவிட வேற என்ன வேணும்? ரசிகர்கள் .. கொண்டாட்டம்!

அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இது ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

ரோகித்  ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ கொடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு.. இதைவிட வேற என்ன வேணும்? ரசிகர்கள் .. கொண்டாட்டம்!

இந்திய கிரிக்கெட் களம் மிகவும் கொதிப்படையும் வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 

அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இது ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இப்படியான சூழ்நிலையில் பிசிசிஐ அதிகாரிகளிடம் டி20 உலகக்கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனா? மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோகித் சர்மா நீக்கப்படுவாரா? என்பது குறித்தான கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய பிசிசிஐ அதிகாரிகள், அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு தங்களின் முதல் விருப்ப கேப்டன் ரோஹித் சர்மா என்றும், அவரே இந்திய அணியை டி20 உலகக் கோப்பையில் வழி நடத்துவார் என்றும், ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்படாது என்றும், மிக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை கட்டி எழுப்பி ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்திச் சென்ற விதத்தில் அவர்கள் மிகவும் திருப்தி அடைந்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். 

பிசிசிஐ அதிகாரிகளின் இந்த தகவல், நேற்று முதல் மிகவும் கலக்கம் அடைந்து இருந்த ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...