ஆபாச படத்தில் நடித்தாரா ரோஜா... ஆதரவாக குரல் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்!

ரோஜா ஆபாச படங்களில் நடித்ததாகவும் அதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறிய அவர், சந்திரபாபுவை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால், வீடியோவை வெளியிடுவேன் என்றும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

Oct 8, 2023 - 11:40
ஆபாச  படத்தில் நடித்தாரா ரோஜா... ஆதரவாக குரல் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரோஜாவை ஆபாசப் பட நடிகை என விமர்சிப்பதாக என சக நடிகையான ரம்யா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1999ம்ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த நடிகை ரோஜா, இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார்.

இதையடுத்து 2014ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஜா, தற்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ரோஜாவை, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். 

மேலும், ரோஜா ஆபாச படங்களில் நடித்ததாகவும் அதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறிய அவர், சந்திரபாபுவை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால், வீடியோவை வெளியிடுவேன் என்றும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா தனது கண்டனத்தை தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதார். அப்போது, அவர் பேசுகையில், நான் நிர்வாண படத்தில் நடித்ததாக தெரிவித்து சித்ரவதை செய்து வருகிறார்கள். 

எனது குணத்தை மதிப்பிடுவதற்கு நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடுக்கவுள்ளேன் என கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் இவ்விவகாரம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். 

அதில், ஒரு அமைச்சரை ஆபாச படங்களில் நடித்தவர் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

இதையடுத்து, சக நடிகையான ரம்யா கிருஷ்ணன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், பெரும் மதிப்புக்குரிய பிரதமர் அவர்களே இந்த விவகாரம் குறித்து தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். நமது நாட்டில் மட்டும் தான் பாரத் மாத்தாகி ஜே என கவர்த்துடன் சொல்லுவோம். இப்படிப்பட்ட இந்த நாட்டில் ஒரு பெண்ணை இவ்வளவு கீழ்தனமாக பேசியவரை மன்னிக்கக்கூடாது, நான் ரோஜாவுக்காக துணை நிற்பேன் என்று ரம்யா கிருஷ்ணன் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!