கூல் சுரேஷ் கேடுகெட்டத்தனமாக நடக்கிறார்.. வர்னிங் கொடுத்த மாயா!

பவா செல்லத்துரை இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது, விசித்ரா பேசுவது மன உளைச்சலை தருகிறது என பிரதீப்பிடம் பேசிக் கொண்டு இருந்தார். 

கூல் சுரேஷ் கேடுகெட்டத்தனமாக நடக்கிறார்.. வர்னிங் கொடுத்த மாயா!

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரத்தின் கேப்டனாக சரவண விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பவா செல்லத்துரை இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது, விசித்ரா பேசுவது மன உளைச்சலை தருகிறது என பிரதீப்பிடம் பேசிக் கொண்டு இருந்தார். 

அப்போது, பிரதீப், அதற்கு என்ன சார் செய்வது மாயாக்கூடத்தான் என் அம்மா பற்றி தவறாக பேசினார். நான் அதை பொறுத்துக்கொண்டேன் என்றார்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த மாயா, நான் எப்போது உங்கள் அம்மாவை பற்றி தவறாக பேசினேன். எனக்கு உங்க அம்மா யார் என்றே தெரியாது என்றார். உடனே பிரதீப் அதற்காகத்தான் கமல் சார் விஜய்க்கு வார்னிங் கார்டு கொடுத்தார். 

நீ தான் என் அம்மாவைப்பற்றி பேசியதாக விஜய் என்னிடம் கூறினார் என்று பிரதீப் கூற, அந்த இடமே களேபரமானது.

இதையடுத்து, கடுப்பான மாயா அடுத்த வாரம் கமல் சார் வரட்டும் நான் குறும்படத்தை போட சொல்கிறேன். இனிமேல், உன்கிட்ட பேசமாட்டேன், நீ சரியான சைக்கோ உனக்கு இப்போது கவுன்சிலிங் தேவை என்று பிரதீப் கடுமையான திட்டினார். இதையடுத்து,கேப்டன் சரவண விக்ரம் தலையிட்டு பிரச்சனையை தீர்த்துவைத்தார்.

இதன்பின் வீட்டின் கேப்டனிடம் கூல் சுரேஷ் என்னிடம் கேடுகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார். பீத்தபொண்ணு என்று அழைக்கிறார், அப்புறம் கண் அடித்து கண் அடித்து பேசுகிறார் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் திமிர பேசுகிறார். 

எங்க வீட்டில யாராவது வரம்பு மீறி நடந்து கொண்டால் கல் எடுத்து அடி என்றுதான் சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். கூல் சுரேஷிடம் யாரும் என் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை என்று மாயா கிருஷ்ணன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்/

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...