அந்த இந்திய வீரரை சமாளிக்க பிளான் போடுங்க... இல்லைனா காலிதான்... எச்சரிக்கை விடுத்த மைக்கேல் வான்! 

இந்த மூன்று இந்திய வீரர்களில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானை, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆட்டம்தான், கவர்ந்துள்ளது.

அந்த இந்திய வீரரை சமாளிக்க பிளான் போடுங்க... இல்லைனா காலிதான்... எச்சரிக்கை விடுத்த மைக்கேல் வான்! 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றியைப் பெற, மூன்று இந்திய வீரர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர்.

யாஷஸ்வி ஜெய்ஷ்வால் அடித்த இரட்டை சதம் , இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் அடித்த சதம், பும்ரா எடுத்த 9 விக்கெட்கள் என்பனதான் இரண்டாவது டெஸ்டில், 399 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணியை 292 ரன்களில் கட்டுப்படுத்தி வெற்றியைப் பெற முடிந்தது. 

இந்த மூன்று இந்திய வீரர்களில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானை, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆட்டம்தான், கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட், முதல் இன்னிங்ஸில் மற்ற பேட்டர்கள் 34 ரன்களை கூட தாண்டாத நிலையில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்திருப்பதை, ஏதோ சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் மைக்கேல் வான் பேசியுள்ளார்.

அதில், ''கடைசி மூன்று டெஸ்டிலும் யாஷஸ்வி ஜெய்ஷ்வால்தான், இங்கிலாந்து அணிக்கு தலைவலியாக இருப்பார். நிச்சயம், கடுமையாக போராடுவார். நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதனால், ஜெய்ஷ்வாலுக்கு எதிராக சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும்'' எனக் கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...