கோலி குறித்து... நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ஸ்ரீகாந்த்.. இதை எப்படி அனுமதிக்கிறாங்க?

மேலும் கேபிளில் இதுதான் வருகிறது என்பதற்காக வேறு வழியின்றி தமிழில் கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறார்கள். தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் கிரிக்கெட்டை தவிர மற்ற விஷயங்களை தான் மற்றவர்கள் பேசுவார்கள்.

கோலி குறித்து... நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ஸ்ரீகாந்த்.. இதை எப்படி அனுமதிக்கிறாங்க?

கிரிக்கெட் வர்ணனையிலே மிகவும் மோசமாக தமிழ் வர்ணனை தான் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாகும். இதனால் பல ரசிகர்கள் தமிழில் பார்க்காமல் ஆங்கிலத்தில் தான் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கிறார்கள். 

மேலும் கேபிளில் இதுதான் வருகிறது என்பதற்காக வேறு வழியின்றி தமிழில் கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறார்கள். தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் கிரிக்கெட்டை தவிர மற்ற விஷயங்களை தான் மற்றவர்கள் பேசுவார்கள்.

குறிப்பாக பாடல் பாடுவது, வீரர்களை அவமரியாதையாக பேசுவது, மச்சான் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது போன்ற அநாகரிகமான கிரிக்கெட் வர்ணனை பெரும்பாலும் இடம்பெறும். 

இந்த நிலையில் இது அனைத்திற்கும் உச்சமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நேற்று கிரிக்கெட் வர்ணனை செய்யும்போது விராட் கோலியை பாராட்டுகிறேன் என்ற பெயரில் ஓ என்று தொடங்கும் ஒரு அநாகரீக வார்த்தையை நேரலையில் பயன்படுத்தினார்.

இதைப் பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவே ஆங்கிலத்தில் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் வர்ணனை செய்ய முடியாத அளவிற்கு தண்டனைகள் வழங்கப்படும். 

ஆனால் தமிழில் இது போன்ற வார்த்தையை சிறு குழந்தைகள் பார்க்கும் போது பயன்படுத்தலாமா என்ற கோபம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...