மாமனார் தலையில் அடித்து சத்தியம் செய்த பாக்கியா... வீட்டிற்கு வந்த கோபி!
இதனிடையே இன்றைய எபிசோடில் செழியன் வீட்டிற்கு மாலினி மீண்டும் வருகிறார். அப்போது தன்னை பார்த்தவுடன் செழியன் சந்தோஷத்தையே வெளிப்படுத்தாமல் உள்ளதை கூறுகிறார்.
விஜய் டிவியின்பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தற்போது உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மகனை பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி.
இதனால் மனதுடைந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறுவதாக பாக்கியா கூறுகிறார். ஆனால் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் இணைந்து அவரை தடுத்து நிறுத்துகின்றனர்.
உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மகன் கோபியை பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. கோபி வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்ற பாக்கியாவின் எச்சரிக்கையை மீறி அவர் செயல்பட, இதனால் தான் வீட்டை விட்டு வெளியேறுவதாக பாக்கியா கூறுகிறார்.
ஆனால் எழில், மாமனார் ராமமூர்த்தி, இனியா மற்றும் மருமகள்கள் ஜெனி மற்றும் அமிர்தா ஆகியோர் இணைந்து அவரை தடுக்கின்றனர். ஒருகட்டத்தில் மாமனார் ராமமூர்த்தி அந்த வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் பாக்கியா வெளியேறக் கூடாது என்று தன் தலைமீது அடித்து சத்தியம் வாங்குகிறார்.
வேறு வழியில்லாமல் பாக்கியாவும் சத்தியம் செய்கிறார். முன்னதாக அந்த வீட்டிற்கு வந்தபோது கோபியும் ராதிகாவும் சேர்ந்து செய்த ரகளைகளை நினைத்து அவர் மனம் கலங்குகிறது.
ராதிகா கோபம்: இதனிடையே தன்னுடைய அம்மா கூப்பிட்டவுடன் எதையும் யோசிக்காமல் தன்னுடைய கணவன் கோபி புறப்பட்டு சென்றது குறித்து தன்னுடைய அம்மாவிடம் கோபம் மற்றும் கலக்கத்துடன் பேசுகிறார் ராதிகா.
கோயியை தான் திருமணம் செய்ய தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன்தான் காரணம் என்றும் முன்னதாக தான் தன்னுடைய மகள் மயூவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும் அவர் தன்னுடைய அம்மா மீது குற்றம் சாட்டுகிறார்.
இதனிடையே இன்றைய எபிசோடில் செழியன் வீட்டிற்கு மாலினி மீண்டும் வருகிறார். அப்போது தன்னை பார்த்தவுடன் செழியன் சந்தோஷத்தையே வெளிப்படுத்தாமல் உள்ளதை கூறுகிறார்.
தாங்கள் முன்னதாக வெளியில் சந்திக்கும் போதெல்லாம் மிகவும் உற்சாகமாக செழியன் பேசுவார் என்று மாலினி கூற, ஜெனி செழியன் இப்படியெல்லாம் பேசுவாரா என்று ஜெனி ஆச்சர்யமாக கேட்கிறார்.
இதனிடையே ஏன் மாலினி அடிக்கடி வீட்டிற்கு வருகிறார் என்று செல்வியும் பாக்கியாவிடம் கேள்வி எழுப்புகிறார். இந்த சந்தேகம் தனக்கும் உள்ளதாக பாக்கியா கூறுகிறார். அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று செல்வி கூற பாக்கியாவின் குழப்பமும் அதிகரிக்கிறது.
இதனிடையே, தான் கூறியதை மீறி ஏன் அடிக்கடி வீட்டிற்கு வருகிறாய் என மாலினியிடம் செழியன் கேட்கிறார். அவரும் அதற்கு பதிலளிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |