27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரத்தில் சனி: ஜனவரி இறுதியில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!
2026 ஜனவரி 20-ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இது மிகவும் சிறப்பான நிகழ்வு, ஏனெனில் இத்தகைய நட்சத்திர பெயர்ச்சி கடந்த 27 ஆண்டுகளில் நிகழவில்லை.
ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்கள் பயணத்தின் போது மனித வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. நவகிரங்களில் “நீதிமான்” என அழைக்கப்படும் சனி பகவான், ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள் தங்குவார். தற்போது அவர் மீன ராசியில் உள்ளார் மற்றும் 2027 வரை அங்கேயே இருப்பார்.
2026 ஜனவரி 20-ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இது மிகவும் சிறப்பான நிகழ்வு, ஏனெனில் இத்தகைய நட்சத்திர பெயர்ச்சி கடந்த 27 ஆண்டுகளில் நிகழவில்லை. இந்த நிலைமை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் குறிப்பாக மகரம், கடகம் மற்றும் மிதுனம் ராசியினருக்கு நிதி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் போன்ற நேர்மறையான பலன்களைத் தரும்.
மகர ராசியினருக்கு, சனியின் இந்த நகர்வு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை வலுப்பெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
கடக ராசியினருக்கு, அதிர்ஷ்டம் புதுவாழ்வைத் தொடங்க உதவும். வெளிநாட்டு வாய்ப்புகள், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு, வெற்றிகரமான திட்டங்கள் போன்றவை காத்திருக்கின்றன. மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களும், வெளிநாட்டில் படிக்கும் கனவு நனவாவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மிதுன ராசியினருக்கு, ஜனவரி இறுதியில் தொழில் மற்றும் வேலை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள் போன்றவை கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து அவை கைக்கு வரும். வணிகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
(இந்தத் தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இது பொதுத் தகவலாக மட்டுமே கருதப்பட வேண்டும். முக்கிய முடிவுகளுக்கு முன் தகுதிவாய்ந்த ஜோதிடரை அணுகவும்.)
