சிஎஸ்கே அணியில் தோனிக்கு முக்கிய பதவி...  ஓய்வுக்கு பிறகு நடக்கவுள்ள ட்விஸ்ட்!

நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங் அணியில் அவர் முக்கிய பதவிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியில் தோனிக்கு முக்கிய பதவி...  ஓய்வுக்கு பிறகு நடக்கவுள்ள ட்விஸ்ட்!

நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் அவர் முக்கிய பதவிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள தோனி, இந்த சீசனில் கேப்டன்சியில் இருந்து விலகி, புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ தயார் செய்து வருகிறார். 

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனி மற்றும் பயிற்சியாளர் பிளெமிங் எடுக்கும் முடிவுகள் தான் இறுதியானதாக இருக்கும் அதிலும், சில நேரங்களில் தோனி தான் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்.

இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓய்வுக்கு பின் ஒவ்வொரு சீசனின் போது தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஏற்கெனவே சச்சின், கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் ஆலோசகராக செயல்பட்டு வரும் நிலையில், தோனியும் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் என்று பார்க்கப்பட்டது. 

சிஎஸ்கே அணியின் சிஇஓ-வாக காசி விஸ்வநாதன் செயல்பட்டு வரும் நிலையில் ஓய்வுக்கு பின் தோனி சிஎஸ்கே அணியின் சிஇஓ பதவிக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதன் மூலம் வீரர்களுக்கான ஏலம் தொடங்கி சிஎஸ்கே அணியின் அத்தனை செயல்பாடுகளிலும் தோனியால் செயல்பட முடியும் என்று கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...