இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்: ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ (BCCI) வெளியிட்டது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ (BCCI) வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை முழுமையாகி இருக்கும் நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை இறுதி செய்யும் பணிகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி - ஜனவரி 11, 2026
2வது ஒருநாள் போட்டி - ஜனவரி 14, 2026
3வது ஒருநாள் போட்டி - ஜனவரி 18, 2026
முதல் டி20 போட்டி - ஜனவரி 21, 2026
2வது டி20 போட்டி - ஜனவரி 23, 2026
3வது டி20 போட்டி - ஜனவரி 25, 2026
4வது டி20 போட்டி - ஜனவரி 28, 2026
5வது டி20 போட்டி - ஜனவரி 31, 2026
முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 அன்றும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 14 அன்றும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 18 அன்றும் நடைபெற உள்ளன. இந்த மூன்று போட்டிகளும் பரோடா, ராஜ்கோட் மற்றும் இந்தூர் ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற உள்ளன.
டி20 போட்டி ஜனவரி 21 முதல் தொடங்கி, ஜனவரி 31 வரை மொத்தம் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஐந்து போட்டிகளும் நாக்பூர், ராய்ப்பூர், கௌஹாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெற உள்ளன.
இதில் ஒரு போட்டி கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவில்லை என்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனினும், சேப்பாக்கம், சின்னசாமி மைதானம் போன்ற முக்கிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் நடைபெற்று வருவதால், இந்தத் தொடருக்கு அந்த மைதானங்கள் பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.