இனியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்காதீங்க... சொதப்பிய சிஎஸ்கே கேப்டன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற புகழ் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற புகழ் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சொதப்பி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி, இந்தியா 'ஏ' அணியுடன் இங்கிலாந்தில் பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி வீரர்களை தயார் செய்யும் வகையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா 'ஏ' அணியில் இடம்பெற்று இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கு தங்களை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது.
இந்தப் பயிற்சிப் போட்டியில் சர்பராஸ் கான் சதம் அடித்து அசத்தினார். ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருக்கிறார். இதை அடுத்து, ருதுராஜுக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும், என கூறி வந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை பரிசாக அளித்திருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மோசமான ஆண்டாகவே அமைந்தது. இந்திய டி20 அணியில் காயம் காரணமாக தனது வாய்ப்பை இழந்தார். அடுத்து, 2025 ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக ஐந்து போட்டிகளுக்குப் பிறகு ஆடும் வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் தான், ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்திருந்தார். டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், 'ஏ' அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்ததால், தன்னை நிரூபித்து இந்திய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் சொதப்பி உள்ளார்.
இதேவேளை, 76 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து மிரட்டி இருந்த சர்பராஸ் கான், இந்திய டெஸ்ட் அணியில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரராக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.