ஒன்றாக இருந்த தோழிகளை பிரித்த சின்னத்திரை.. மீண்டும் எப்போது சேருவார்கள்?

ஜீ தமிழ் சீரியல்களில் வரும் ஹீரோயின்கள் மற்றும் வில்லிகள் அழகிகள் மட்டுமல்ல அற்புதமான நடிகைகளும் கூட.

ஒன்றாக இருந்த தோழிகளை பிரித்த சின்னத்திரை.. மீண்டும் எப்போது சேருவார்கள்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களை விட, ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சீரியல் நடிகைகளின் நட்பும், அவர்களின் அன்பான அனுசரிப்பும் தான்.

சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், ஷபானா, நக்ஷ்த்திரா இவர்களின் நட்பையும், சேட்டைகளையும் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. 

அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் அனைத்துக் கொண்டு, அதகளம் செய்து கொண்டு இருப்பார்கள். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்தாலே பார்ட்டி தான். 

பண்டிகையாக இருந்தாலும், பிறந்தநாளாக, திருமணமாக இருந்தாலும் எப்போதும் நான்கு பேரும் சேர்ந்துதான் இருப்பார்கள். இதில் யாராவது ஒருவருக்கு பிறந்தநாள் என்றால், மற்ற மூன்று பேரும் வந்து சர்ப்ரைஸ் கொடுப்பார்கள்.

அப்படித்தான் ஒருமுறை நக்ஷ்த்திரா பிறந்தநாள் போது மற்ற மூன்று பேறும் மோகன்லாலை போல வேட்டி, சட்டை போட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்கள். 

அதேபோல சைத்ரா கல்யாணத்தின் போது இவர்கள் நான்கு பேரும் கடற்கரையில் எடுத்த ப்ரீ வெட்டிங் போட்டோஷீட்களை காண கண்கோடி வேண்டும். அந்த புகைப்படங்கள் எல்லாமே அவ்வளவு அழகாக இருந்தது. அவை எல்லாமே சமூக வலைதளங்களில் வைரலாகின.

தோழிகள் என்றால் இவர்களை போல இருக்க வேண்டும் என்று பலரும் கூறினர். குறிப்பாக சீரியல்கள் நடிகைகளிடையே போட்டியும், பொறாமையும் தான் இருக்கும், நட்பு இருக்காது என்று தான் நம்மில் பலரும் நினைத்திருப்போம். 

ஆனால் அதையெல்லாம் மாற்றி,  இவர்கள்  4 பேரும் சின்னத்திரையின் தோழிகளாக வலம் வந்தார்கள். ஆனால் இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒவ்வொரு நடிகையும், ஒவ்வொரு தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டனர்.

யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதாவாக வில்லியாக நடித்து அனைவரிடமும் திட்டு வாங்கிய சைத்ரா ரெட்டி, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஒரு பொறுப்பான குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்போது இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1.

அடுத்ததாக பூவே பூச்சூட வா சீரியலில், சக்தியாக நடித்து அனைவரையும் கவர்ந்த ரேஷ்மா முரளிதரள் இப்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலில் நடித்து வருகிறார். அதில் இவரது கணவர் மதன் தான் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பூவே பூச்சூட வா சீரியலில், ரேஷ்மாவின் கொழுந்தனாக நடித்திருந்தார்.

ஆனால் ஷபானா மட்டும் இன்னும் அதே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார்.  இந்த சீரியல் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆயிரம் எபிசோட் அல்ல இன்னும் 10 ஆயிரம் போனாலும் செம்பருத்தி சீரியல் முடியாது என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கத் தொடங்கி விட்டனர்.

யாரடி மோகினி சீரியலில் அப்பாவி பெண்ணாக, முத்து மாமாவின் மனைவியாக நடித்த நக்ஷ்த்திரா, இப்போது எந்த தொடரிலும் நடிக்கவில்லை. அவ்வப்போது சில சீரியல்களில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். விரைவில் இவர் புதிய சீரியல் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இதில் சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், ஷபானா-வுக்கு திருமணமாகி விட்டது.  இவர்கள் கேங்கில் நக்ஷ்த்திரா மட்டும் இன்னும் சிங்கிளாக இருக்கிறார்.

இப்படி ஒரே தொலைக்காட்சியில் ஒன்றாக ஆட்டம் போட்ட தோழிகள் இப்போது தனித்தனியாக வெவ்வேறு சேனலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இதை நினைத்து அவர்கள் வருத்தப்படுகிறார்களோ இல்லையோ ரசிகர்கள் கண்டிப்பாக வருத்தப்படுவார்கள்!