ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் ஜூலை 9 ஆம் திகதி, பலவந்தமாக நுழைந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் ஜூலை 9 ஆம் திகதி, பலவந்தமாக நுழைந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போதைய பிரதமரின் தனிப்பட்ட வீட்டில் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், பொருட்களை திருடியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் நேற்று மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மருதானை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடையவர்.