மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் பொலிஸருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் இன்று ( 31 ) காலை 09 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் பொலிஸருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.