குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

0

ஹட்டன், டிக்கோயா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

டிக்கோயா தோட்டத்தில் இன்று (25) முற்பகல் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயா தரவலை தோட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா என்பரவே உயிரிழந்தவாராவார்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 8 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.

குறித்த 8 பேரும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x