மார்பகத்தை பெரிதாக்கச் சொன்னார்கள்: தீபிகா படுகோன் அதிர்ச்சி தகவல்

மார்பகங்களை பெரிதாக்குமாறு சொன்னதே மோசமான அறிவுரை ஆகும். எனக்கு 18 வயது இருந்தபோது அப்படி ஒரு அறிவுரை வழங்கப்பட்டது.

மார்பகத்தை பெரிதாக்கச் சொன்னார்கள்: தீபிகா படுகோன் அதிர்ச்சி தகவல்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனக்கு வழங்கப்பட்ட சிறந்த மற்றும் மோசமான அறிவுரை பற்றி பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஷாருக்கான் நல்ல அறிவுரை வழங்குவார். அவர் எனக்கு நிறைய நல்ல அறிவுரைகள் வழங்கியிருக்கிறார். படங்களில் நடிக்கும் போது நாம் நம் வாழ்க்கையை வாழ்கிறோம், அனுபவம் பெறுகிறோம். அதனால் நமக்கு ஒத்துப் போகும் நபர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதே ஷாருக்கான் வழங்கிய சிறந்த அறிவுரை ஆகும்.

மார்பகங்களை பெரிதாக்குமாறு சொன்னதே மோசமான அறிவுரை ஆகும். எனக்கு 18 வயது இருந்தபோது அப்படி ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் மோசமான அறிவுரையை நான் ஏற்காமல் தன்மையாக நடந்ததை நினைத்தால் வியப்பாக உள்ளது என்றார்.

கெரியரை பொறுத்தவரை தீபிகா நடித்த கெஹ்ரையான் படம் பிப்ரவரி 11ம் திகதிஅமேசான் பிரைமில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்ததாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து ஃபைட்டர் படத்தில் நடிக்கிறார் தீபிகா. படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது. படத்தை 2023ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.