திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! என்னாச்சு தெரியுமா?

WhatsApp, WhatsApp Web down for thousands of users : இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். முடக்கத்திற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.

திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! என்னாச்சு தெரியுமா?

வாட்ஸ்அப் சேவை முடங்கியது

WhatsApp, WhatsApp Web down for thousands of users : இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். முடக்கத்திற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போல தற்போது உலகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்தும் செயல்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. 

தகவல் பரிமாற்றத்தோடு நின்றுவிடாமல் தற்போது வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகளையும் வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு வழங்குகிறது.

வாட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் கவனமாக செயல்பட்டு வரும் நிலையில் அடிக்கடி அப்டேட்டுகளும் விடப்பட்டு வருவதால் வாட்ஸ் அப் பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆனாலும் அதிலும் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பயனாளர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. 

திடீரென ஹேக்கர்கள் அனுப்பிய லிங்குகளை ஓபன் செய்த வாடிக்கையாளர்கள் அவர்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உணர்ந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு புகார்களை தெரிவித்தனர்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியது. இந்நிலையில் தற்போது உலகின் பல இடங்களில் வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில் முடக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் முடக்கத்தை சரி செய்யும் பணியில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் மென்பொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW