வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.. இனி 'இந்த' சிக்கலே இல்லை 

நீண்ட கால சிக்கலுக்கு ஒரு வழியாகத் தீர்வை கொடுத்த வாட்ஸ்அப் இதனால், பெரும்பாலான வாட்ஸ்அப் பயனர்கள் பிற பயன்பாடுகள் மற்றும் தளங்களை நாட வேண்டியிருந்தது. 

வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.. இனி 'இந்த' சிக்கலே இல்லை 

வாட்ஸ்அப் பயனர்களுக்கு நீட காலமாகச் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் அவர்களால் இன்று வரை மிகப் பெரிய பைல்களை பகிர முடியவில்லை. 

வாட்ஸ்அப் பயனர்கள் அனைவருக்கும் வெறும் 100MB அளவுள்ள பைல்களை மட்டுமே அனுப்ப அனுமதிக்கப்படுகிறது. இதனால், பயனர்கள் பெரிய சைஸ் பைல்களை தங்கள் நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ அல்லது சகாக்களுக்கோ அனுப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. 

நீண்ட கால சிக்கலுக்கு ஒரு வழியாகத் தீர்வை கொடுத்த வாட்ஸ்அப் இதனால், பெரும்பாலான வாட்ஸ்அப் பயனர்கள் பிற பயன்பாடுகள் மற்றும் தளங்களை நாட வேண்டியிருந்தது. 

இதை அறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு வழியாக இப்போது இதற்கென்று ஒரு தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இனி 100MB க்குள் மட்டுமே பைல் சைஸ் இருக்க வேண்டும் என்ற கவலையே வேண்டாம் மக்களே. 

கையில இந்த ரேகை தெளிவா இருக்கா? பண பிரச்சனையே வராதாம்..

இறுதியாக வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும், அவர்களின் தொடர்புகளுக்கு 2 ஜிபி வரை அளவுள்ள பைல்களை அனுப்ப அனுமதிக்கப்படுகின்றனர். 

இனி வாட்ஸ்அப் பயனர்களுக்கு 'இந்த' சிக்கலே இல்லை இந்த அம்சம் பற்றி வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது. இதன் படி, ஒரு சமீபத்திய வலைப்பதிவு இடுகையில், ஒரு ஃபைலைப் பகிர்வதற்கான 100MB அளவின் வரம்பு, இப்போது முதல் 2GB ஆக மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

வார ராசிபலன் - இந்த வாரம் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கப் பெறலாம்...

இது நிச்சயமாக அனைத்து சிறு வணிகங்களுக்கும், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் கல்விக் குழுக்களுக்கும் அவர்களின் தினசரி தகவல்தொடர்புக்கும் உதவி, பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. 

ஒரு ஃபைலை பகிர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? 

ஒரு ஃபைலை பகிர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பயனர்களுக்குத் தெரிவிக்க, ஒரு கவுண்டரையும் WhatsApp அதன் தளத்தில் காண்பிக்கிறது. 

பெரிய அளவிலான ஒரு ஃபைலை பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பயனர்கள் மதிப்பிடுவதை உறுதிசெய்ய, வாட்ஸ்அப் பயன்பாடு இப்படி ஒரு கவுண்டரைக் காண்பிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும், தகவல்தொடர்புக்காக ஒரே குழுவில் 512 பயனர்கள் வரை சேர்க்கும் திறனை வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காக மெதுவாக வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

 புதிய ஈமோஜி ரியாக்ஷன்

புதிய ஈமோஜி ரியாக்ஷன்களும் இப்போது பிளாட்ஃபார்மில் கிடைக்கின்றன என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சங்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் வராது என்பதை நினைவில் கொள்ளவும். எந்த பிராந்திய பயனர்கள் முதலில் புதுப்பிப்புகளைப் பெறுவார்கள் என்பது குறித்து WhatsApp கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் இது நிச்சயமாக மெதுவாக அனைவருக்கும் கிடைக்கும் படி, ஒவ்வொரு வட்டமாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோல், வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது வாட்ஸ்அப் பேமெண்ட் பயனர்களுக்கு ஏராளமான கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வேற லெவல் அப்டேட் 

இந்த புதிய அம்சங்கள் நிச்சயமாக டெலிகிராம் பயனர்களின் கவனத்தைச் சற்று ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு புதிய அம்சங்களைச் சேர்த்து, ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் செயலியின் வடிவமைப்பை மாற்றியமைத்து வருகிறது. 

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள WhatsApp பயன்பாட்டிற்கான இந்த அம்சங்களைப் பெறுவதை உறுதிசெய்ய, பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும். ஆண்ட்ராய்டு மற்றும் iOSக்கு, ஆப்ஸ் அப்டேட் வெளிவரும் நேரம் மற்றும் பதிப்புகள் வேறுபடும் என்பது கவனிக்கத்தக்கது.