பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஆலியா பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவராத்திரி ஸ்பெஷலாகத் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் வெளியிடும் போட்டோஷூட்டிற்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில், லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஆலியா பட்டின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நவராத்திரி பண்டிகையின் கொண்டாட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தப் புகைப்படங்கள், பாரம்பரிய உடை மற்றும் நகைகளுடன் ஆலியா பட்டின் அழகை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஆலியா பட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஆலியா பட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்