இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோத வேண்டும் - சோயிப் அக்தர்!

டி20 உலகக்கிண்ணம் 2022 தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான்  மோத வேண்டும் - சோயிப் அக்தர்!

டி20 உலகக்கிண்ணம் 2022 தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என கோடான கோடி ரசிகர்கள் விரும்புகிறார்கள். 

டி20 உலகக்கிண்ணம் : நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

மேலும், பாகிஸ்தான் ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள காணொளியில், “ஹிந்துஸ்தான், நாங்கள் மெல்போர்னுக்கு முன்னேறிவிட்டோம். 

உங்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கிலாந்தை வீழ்த்தி நீங்கள் மெல்போர்ன் வர மனதார வாழ்த்துகிறேன். மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.

தற்போது 2022ஆவது வருடம். வருடம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் நம்பர் ஒன்றேதான். நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன். 

இன்னொரு முறை மோதப் போகிறோம். நமக்கு இன்னும் ஒரு போட்டி தேவை. உலகம் முழுவதும் மூச்சு விட முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW