ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்த்தன சத்தியப் பிரமாணம்
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியது.
பாராளுமன்றம் காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது வஜிர அபேவர்த்தனவின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு சென்ற நிலையில் தற்போது அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதால், குறித்த ஆசனம் வெற்றிடமாகி இருந்தது.
இதனால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்து.