Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

விருச்சிகம்

சுப தினங்கள்:   6th, 8th, 9th, 11th, 13th, 18th, 23rd 28th and 30th

அசுப தினங்கள்:   4th, 7th, 12th, 24th, 26th and 29th

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் தங்கள் ஆசை மற்றும் அபிலாசைகள் நிறைவேறும் மாதமாக இருக்கும். நீங்கள் தைரியமாகவும், விடா முயற்சியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் பன்முகத் திறனை பயன்படுத்தி உங்கள் நேரத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்துவீர்கள். ஊக வணிகம் மூலமாக நீங்கள் நல்ல பலன்களைக் கான்பேஏர்கள். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். உங்கள் குடும்ப அங்கத்தினருடன் நீங்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இது உங்களுக்குய் மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் சமூக சேவை செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். அதன் மூலம் மனத் திருப்தி பெறுவீர்கள். நீங்கள் ஆன்மிகம் மற்றும் மறை கலைகளை அறிந்து கொள்வதில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஊக்கத்துடனும் முனைவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் நீங்கள் அலட்சியம் காட்டுவீர்கள். சரியான உணவு முறையை பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிக்க ராசி இளம் வயதினருக்கு மனதில் காதல் அரும்பும். திருமணம் ஆகாதவர்களுக்கு தாமதம் மற்றும் தடை ஏதும் இன்றி திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இனிய இல்லறத்தை நடத்துவீர்கள்.

இந்த மாதம் உங்கள் நிதிநிலை உயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும். உங்களில் சிலர் வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கை அந்தஸ்து உயரும். ஊக முதலீடுகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதில் நீங்கள் பெரிய தொகையை முதலீடு செய்வீர்கள். பயணங்கள் பலவும் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் உங்கள் கூடுதல் செலவினங்கள் அதிகரிக்கும்.

Text

உங்களில் சிலர் இந்த மாதம் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து தவறான போக்கில் நடந்து கொள்வீர்கள். அதே சமயத்தில் உங்கள் பணிகளை நீங்கள் திறம்பட முடித்து அளிப்பீர்கள். உங்கள் பன்முகத் திறன் மற்றும் கடின உழைப்பு மூலம் நீங்கள் பணியில் உங்களுக்கென ஓரு பாதை வகுத்துக் கொள்வீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன்களைக் காண்பீர்கள்.

விருச்சிக ராசி வியாபாரம் செய்யும் அன்பர்கள் புதிய தொழில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வார்கள். கூட்டுத் தொழில் புரிபவர்கள் தங்கள் கூட்டாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். தொழிலில் நீங்கள் சில சவால்களையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் முன்னேற்றம் மேலும் ஒரு படி உயரும். நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது.

நீங்கள் நடைமுறையை உணர்ந்து செயல்பட வேண்டிய மாதம் இது. உங்கள் முறையான தகவல் பரிமாற்றம் மற்றும் தொடர்பு மூலம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண இயலும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற முடியும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்ற நீங்கள் உறுதியுடன் செயல்பட வேண்டும்.

விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் சாதாரண பலவீனம் மற்றும் களைப்பிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு உடல் வலி, வாய்த் தொல்லை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டும். இரத்தக் குறைபாடு ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். ஹீமோகுளோபின் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பச்சைக் காய்கறிகள் பால் பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மாதம் விருச்சிக ராசி மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் பொதுவாகவே விரைந்து கற்கும் இயல்பு உடையவர்கள். இந்த மாதம் உங்கள் கிரகிக்கும் திறன் கூடுதலாக இருக்கும். நீங்கள் உங்கள் சக மாணவருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பீர்கள். அதன் மூலம் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவி புரிவீர்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறஅனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கு வந்து சேரும்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x