ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் விராட் கோலி

0

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த முறை 100வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய வீரர கோலி. விளம்பரங்கள் மூலமாக 21 மில்லியன் டொலரும், சம்பளமாக 4 மில்லியன் டொலரும், சேர்த்து ஆண்டுக்கு 25 மில்லியன் டொலர்வருமானம் ஈட்டுவதாக கூறியுள்ளது.

இதன்படி, ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அதிக வருமானம் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும், ஒரே கிரிக்கெட் வீரர் கோலி மட்டுமே ஆவார்.

உலகின் அதிக வருமானம் ஈட்டும் வீரராக அர்ஜெண்டினா கால்பந்துவீரர் மெஸ்ஸி உள்ளார். அவர் 127 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்டுகிறார்.

அடுத்த இடத்தில் போர்ச்சுக்கல் தலைவர் ரொனால்டோ 109 மில்லியன் டொலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 105 மில்லியன் டொலருடன் உள்ளார். நான்காவது இடத்தில் 94 மில்லியன் டொலருடன் மெக்ஸிகோ பாக்ஸர் அல்வெர்ஸ் உள்ளார்.

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 93.4 மில்லியன் டொலருடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

என்பிஏ வீரர்கள் ரஸல் வில்சன் மற்றும் ஆரோன் ரோட்ஜர்ஸ் இருவரும் 6 மற்றும் 7வது இடத்தில் உள்ளனர். டைகர் உட்ஸ் 69.3 மில்லியன் டொலருடன் வருமானத்துடன் 11வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் செரினா வில்லியம்ஸ் 29.2 மில்லியன் டொலருடன் 63ஆவது இடத்தில் உள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x