500 படங்களில் நடித்தும் கடைசி காலத்தில் கர்ச்சீப் விற்ற நடிகை

பல முன்னணி நடிகர்கள் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரங்கம்மாள் பாட்டி நேற்று காலமான நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

500 படங்களில் நடித்தும் கடைசி காலத்தில் கர்ச்சீப் விற்ற நடிகை

எம்ஜிஆர் முதல் வடிவேலு வரை பல முன்னணி நடிகர்கள் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரங்கம்மாள் பாட்டி காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்றார். 

தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 500 படங்களில் நடித்துள்ள ரங்கம்மாள் பாட்டி பரத்தின் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் இடம்பெற்ற வடிவேலுடனான காமெடி மூலம் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானார். 

9 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த போதும் கடைசி காலத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக ரங்கம்மாள் பாட்டி மெரினா கடற்கரையில் கர்ச்சிப் விற்று தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
 
நடிகர் சங்கம் அவருக்கு உதவித் தொகையாக ரூ. 5 ஆயிரத்தை 2018 ஆம் ஆண்டு வழங்கி இருந்தது. உடல்நலக் குறைவால் தனது சொந்த ஊரான அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் பாட்டி மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.