கொரோனா வைரஸ் , US approves ,corona treatment

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு, வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் பலனளிப்பதால், அவற்றை அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், கடந்த 5 மாதங்களில் உலகம் முழுக்க பரவி இதுவரை 34 இலட்சம் பேரை தொற்றியுள்ளது.

இதற்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று எபோலோவுக்காக உருவாக்கப்பட்ட ஆன்டி வைரல் மருந்தை, சில மாற்றங்களுடன் கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை செய்தது.

மூன்று கட்ட சோதனை முடிவில் ரெம்டெசிவர் என்ற அம்மருந்து நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. இது அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உதவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய அலெர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் ஆயிரம் பேர்களிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளை வெளியிட்டது.

அதில், சுவாச கோளாறு உள்ளவர்கள் இம்மருந்தால் விரைவில் குணமடைகிறார்கள். மற்ற மருந்துகளை விட, குணப்படுத்தும் நேரத்தை 31 சதவீதம் இது விரைவாக்குவதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் அவசர சிகிச்சைகளுக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி

தேர்தலை பிற்போடுவது பாரதூரமான குற்றமல்ல - ஆனந்த சங்கரி

Next Article
கொரோனா

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172ஆக உயர்வு

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
4
Share