சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ஜெயிலர் படக்குழுவின் சர்ப்ரைஸ்

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகராக உட்ச நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் அஸ்ஸலாம் திரைப்படத்தில் முக்கியமான சிறப்பு கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். 

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் திரைப்படத்தில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படக்குழுவினர் புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர்.