ஜனாதிபதி தேர்தலில் ரணில் அமோக வெற்றி வெற்றி
இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவுச் செய்வதற்காக, நடத்தப்பட்ட வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்று நிறைவடைந்தது.

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவுச் செய்வதற்காக, நடத்தப்பட்ட வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்று நிறைவடைந்தது.
அதில் அதிகபட்சமாக வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றிப்பெற்றுள்ளார்.
வாக்கெடுப்பில் சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் 223 பேர் வாக்களித்துள்ளனர். அதில், நான்கு வாக்குகள் செல்லுப்படியற்ற வாக்குகளாகும். அதன்படி 219 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாகும்.
இந்த வாக்களிப்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளாது புறக்கணித்து இருந்தனர்.
டலஸ் அழகப்பெரும 82, அநுரகுமார 3 வாக்குகள் பெற்றனர்.
வேட்பாளர்கள் | வாக்குகள் |
டலஸ் அழகப்பெரும | 82 |
ரணில் விக்ரமசிங்க | 134 |
அநுர குமார திசாநாயக்க | 3 |